மகிழ்ச்சி!
மகிழ்ச்சி என்பது தீக்குச்சியின் ஒளியைபோலது
அறையெங்கும் பரவிய இருளைக்கூட வென்றுவிடும்.
வறட்சியில் மகிழ்ச்சியை காண இயலுமா?
பாலையிலும் நீரில்லா ஓடையிலும்
சாரல் அடிக்கும் தருணம் மகிழ்ச்சி.
மந்தமான நாட்களிலே
வியக்கமூட்டும் நிகழ்வுகள் மகிழ்ச்சி.
எட்டா தூரம் சென்றாலும்
நெஞ்சை ஈர்க்கும் நேசங்களின் நினைவுகள் மகிழ்ச்சி.
காலத்தால் அழியாத உணர்வுகள்
ஓர் குடும்பமாய் இணையும் காலம் மகிழ்ச்சி.
மறையும் பொழுதும்
பன்மடங்கு வண்ணம் பெருகி
அழகூற்றும் இலையுதிர்காலம் மகிழ்ச்சி.
உதிர்ந்தாலும் காலம் தவறாது
மரத்திற்கு மாலையிடும்
பூவின் மொட்டவிழ்தல் மகிழ்ச்சி.
வாழ்க்கை எனும் யுத்தத்தில்
உணர்வு ஊற்றும் அன்பு மகிழ்ச்சி.
சரமாரியாக தடுமாறிய பொழுதில்
இறைவனின் கருணை மகிழ்ச்சி.
மேற்கிய மொழியில் பயணங்கள் தொடர்ந்தாலும்
அவ்வப்பொழுது செவியில் பாயும்
செந்தமிழ் மகிழ்ச்சி.
படிக்கும் வாசகத்தின் பொருள் புரிதல்
எம்மொழியிலும் மகிழ்ச்சி.
கேளிக்கையின் இன்பம் தவிர்த்து
அறத்தால் வரும் இன்பம் நாடும்
மனம் மகிழ்ச்சி.
கண்களை குளிரூற்றினாலும்
சிற்றின்ப இச்சை நஞ்சமே என்று
தவிர்க்கும் ஞானம் மகிழ்ச்சி.
தவறை திருத்த என்னும் ஏக்கம் மகிழ்ச்சி,
எட்டா கனியையும் பறிக்கும் வீரம் மகிழ்ச்சி.
என்னை நம்பினால் போதும் என்று
நிம்மதியின் துவக்கத்தை காண்பித்த
இயேசு நாதரின் சாசனம் மகிழ்ச்சி.
இடுக்கண் காலத்திற்கு
நாட்குறித்த அகமும் முடிவும் இல்லா
திரியேக நாதருக்கு போற்றி போற்றி.
- கவின் -
27 June 2021